ADDED : ஜன 21, 2025 07:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்ஷாத் கார்டன்: மின் கம்பிகளைத் திருடியதாக மாநகராட்சி ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புது தில்லி நகராட்சி மன்றத்தின் (NDMC) ஊழியர் சுதிர் என குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு கட்டுமானப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் மின்கம்பிகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு அங்கு பணியாற்றி வந்த காவலாளி தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு சைக்கிளில் மின்கம்பிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மாநகராட்சி ஊழியர் சுதிர் என்பதும், மின்கம்பிகளை திருடிச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.