ADDED : செப் 24, 2025 12:19 AM

புதுடில்லி:மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் சிலை நிறுவுதல் குறித்து, நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
டில்லி மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம் மேயர் இக்பால் சிங் தலைமையில் நாளை மறுநாள் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை, சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஷெல்லி ஓபராய் மேலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் சிலை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டில், அப்போதைய மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநகராட்சி வளாகத்தில் அம்பேத்கர் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோர் சிலைகளுக்கு இடையில் பகத்சிங் சிலை அமைக்க பரிந்துரைத்தார்.
பகத்சிங் சிலை அமைக்க 22 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனுமதி கவுன்சில் கூட்டத்தில் அனுமதி கிடைத்தால், மாநகராட்சி அலுவலக வளாக பராமரிப்புச் செலவில் இருந்து சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஜிபூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா குப்பைக் கிடங்குகளில் குப்பையை முற்றிலும் அகற்றி நிலத்தை மீட்டெடுப்பது குறித்து, நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும், திமார்பூர் தொகுதி நேரு விஹாரில் சாலைகள் மற்றும் வடிகால்கள் அமைக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.