
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை துார் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது. கங்கையின் இயற்கையான வழித்தடத்தை மாற்றுவது சுற்றுச்சூழல் குற்றம். இது, கங்கையில் வாழும் நீர் உயிரினங்களை பாதிக்கும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
பிரியங்கா பாராட்டினார்!
பார்லிமென்ட் வளாகத்தில் நடந்து சென்ற போது நான் காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவை சந்தித்தேன். அவர் என் பணியை பாராட்டினார். என் கூந்தல் அழகாக இருப்பதாக கூறினார். அவரிடம் நான் நடித்த எமர்ஜென்சி படத்தை பற்றி கூறினேன். வாய்ப்பு இருந்தால் பார்ப்பதாக கூறினார்.
கங்கனா ரனாவத்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
கன்னமா முக்கியம்?
டில்லி கல்காஜி தொகுதி பா.ஜ., வேட்பாளர், 'என் கன்னம் போல் சாலை அமைப்பேன்' என்று கூறியது அபத்தமான கருத்து. அவருக்கு டில்லி மக்கள் பதிலடி தருவர். இது போன்ற பொருத்தமற்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு பதில், டில்லியின் முக்கிய பிரச்னைகளை ஊடகங்கள் விவாதிக்க வேண்டும்.
பிரியங்கா
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்