தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கள்ள நோட்டு தயாரித்த கும்பல் டில்லியில் கைது

கள்ள நோட்டு தயாரித்த கும்பல் டில்லியில் கைது

கள்ள நோட்டு தயாரித்த கும்பல் டில்லியில் கைது


UPDATED : அக் 07, 2026 08:34 PM

ADDED : அக் 07, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:34 PM ADDED : அக் 07, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பலை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 10.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

டில்லி, பிரசாந்த் விஹார் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் விநியோகம் குறித்த தகவலின் அடிப்படையில், ஜப்பானிய பூங்கா அருகே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது புஷ்கர் ராஜ் புர்பியா, 56, கோசாய் ராம், 22 மற்றும் சாஹில் கார்ப், 28 என்ற மூன்று பேர் கள்ளநோட்டுகளுடன் சிக்கினர்.

அவர்களிடம் 500 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நரேந்திர குமார், 31 என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர்களில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த புஷ்கர் ராஜ் புர்பியா என்பவர், ரியல் எஸ்டேட் தரகராகப் பணியாற்றி வந்துள்ளார். கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விடுவதற்காக, அவரை பயன்படுத்தி உள்ளனர்.

பார்மரைச் சேர்ந்த கோசாய் ராம், கள்ள நோட்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சேகரிப்பதிலும், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதற்கான செயல்முறையைக் கற்றுக்கொள்வதிலும் ஈடுபட்டுள்ளார். கள்ள நோட்டுகளைத் தயாரிப்பதற்காக சோனிபட்டில் வாடகைக்கு இடம் ஏற்பாடு செய்ததிலும், அவற்றை மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று புழக்கத்தில் விடுவதற்கு உதவியதிலும் அவரும் கர்பும் கூட்டாளிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். சோனிபட்டைச் சேர்ந்த கர்ப், கடை நடத்தி வந்துள்ளார். கள்ளநோட்டு தயாரிக்க மூலப்பொருட்களைச் சேகரித்தல், இடவசதியை ஏற்பாடு செய்தல் மற்றும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் ஆகியவற்றில் அவர் உதவியுள்ளார்.

கைதானவர்களின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கள்ளநோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அச்சிடும் உபகரணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், அச்சிடும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சோதனையில், மொத்தம் 21 கட்டுகளில் இருந்த, 10.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் கள்ள நோட்டு அச்சிட பயன்படும் வெற்றுத் தாள்களும் சிக்கின.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us