ADDED : பிப் 06, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபைத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.
நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. அன்றைய தினம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாக எந்தப் புகாரும் இல்லை.
நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்க உள்ளது. நாளை மாலைக்குள் முடிவுகளை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். எனினும் தேர்தல் முடிவு நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் விரிவான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
- நமது நிருபர் -

