பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள் திருப்பி தாக்கும் உரிமை பெற்றவை அரபு நாடுகள் அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்சங்கர் உறுதி
பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள் திருப்பி தாக்கும் உரிமை பெற்றவை அரபு நாடுகள் அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்சங்கர் உறுதி
ADDED : பிப் 01, 2026 02:21 AM

புதுடில்லி: ''பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள், பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு உரிமை பெற்றவை,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியா - அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பொதுவான ஆபத்து இரண்டாவது ஆண்டாக நடக்கும் இந்த கூட்டத்தில், அரபு லீக் நாடுகள் எனப்படும் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பயங்கரவாதம் நம் அனைவருக்கும் பொதுவான ஆபத்து. பயங்கரவாதத்தை துளி கூட சகித்துக்கொள்ள கூடாது. இது உலகளாவிய விதியாக மாற வேண்டும்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள், அந்த பயங்கரவாத குழுக்கள் பதுங்கியுள்ள இடங்களை தாக்கி தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை கொண்டவை. அதை அவர்கள் பயன்படுத்து வது இயல்பானது .
மேற்கு ஆசியாவில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும். இது நம் பொது நலனுக்கு மிக அவசியம். குறிப்பாக காசா நிலைமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னுரிமை க டந்த ஆண்டு அக்டோபரில் நடந்த காசா அமைதி மாநாடு, தற்போது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானமாக மாறியுள்ளது.
காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் இந்த திட்டத்தை முன்னெடுப்பது இன்று எல்லா நாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமையாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் சூடான், ஏமன் , லெபனான் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் மோதல்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

