ADDED : செப் 24, 2024 01:35 AM
குணா, மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசித்து வரும் சர்சஹேலா கிராமம் உள்ளது.
இங்குள்ள ஒரு வீட்டில், ஹிந்து மதத்தைச் சேர்ந்தோரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சரண்சிங் என்பவர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அங்கு கிறிஸ்துவ மத போதகர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் ஹிந்து மதத்தினரை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மதம் மாறுவோருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ராஜஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் சஞ்சு சைமன், அவரின் மனைவி மஞ்சு, வீட்டின் உரிமையாளர் பால்முகுத், உள்ளூர்வாசிகள் சாவித்ரி பாய், பிங்கி சஹாரியா ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

