3,500 கிலோ பட்டாசு பறிமுதல் மகனுடன் தம்பதி பிடிபட்டனர்
3,500 கிலோ பட்டாசு பறிமுதல் மகனுடன் தம்பதி பிடிபட்டனர்
ADDED : செப் 28, 2025 03:56 AM
புதுடில்லி:வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3,500 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேற்கு டில்லியின் ரஜோரி கார்டன் விஷால் என்கிளேவில் வசிப்பவர் சுஷில் கக்கர்,53, மோடி நகரில் ஹோட்டல் நடத்துகிறார் .
துர்கா பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக சுஷில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், காஜியாபாத், ஹரியானா மாநிலம் குருகிராம் ஆகிய இடங்களில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்தார்.
தன் வீட்டின் சமையலறை உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு பார்சல்களை சேமித்து வைத்தார்.
பெரிய பண்டல் களில் இருந்த பட்டாசு ரகங்களைப் பிரித்து, சுஷில், அவரது மனைவி உபாசனா,50, மகன் சிவம்,28. ஆகிய மூவரும் சிறிய பைகளில் போட்டு விற்பனைக்கு தயார் செய்தனர்.
இதற்கிடையில், ரகசியக் தகவல் அடிப்படையில் சுஷில் வீட்டுக்குள் நேற்று அதிரடியாகப் புகுந்த போலீசார், 3,580 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
தலைநகர் டில்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.