ADDED : டிச 20, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு; ஆந்திராவின் குந்துர்பிமண்டலாவின் வெங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ரெட்டி, 45. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி ஜோதி, 34. இரண்டாவது மனைவி லட்சுமி தேவி, பெங்களூரில் வசிக்கிறார்.
கோவிந்த ரெட்டியும், ஜோதியும் நேற்று முன் தினம், பாவகடாவின் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். நேற்று காலை 9:30 மணியளவில் பாவகடா புறநகரில் செல்லகெரே சாலை அருகில் உள்ள நிலத்தில் இருவரும் விழுந்து கிடந்தனர்.
இதை பார்த்த அப்பகுதியினர், அருகில் வந்து பார்த்தபோது ஜோதி இறந்துவிட்டார்; கோவிந்த ரெட்டி மயக்கத்தில் இருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
பாவகடா போலீசார் விசாரிக்கின்றனர்.

