ADDED : பிப் 25, 2024 02:41 AM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கைர்தால் -திஜாரா மாவட்டத்தில் வசித்தவர் மனோஜ்,45. அவரது மனைவி மனைவி சுனிதா தேவி, 42.
இருவரும் நேற்று முன் தினம் மாலை, பண்ணையில் குழாய்களை மாற்றச் சென்றனர். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் நள்ளிரவில் பண்ணைக்கு சென்றனர். அங்கு தேடிய போது, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு இருவரையும் மயங்கிய நிலையில் கண்டுபிடித்தனர்.
மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். இருவரும் விஷம் குடித்திருப்பதைக் கண்டுபிடித்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நேற்று அதிகாலையில் இருவரும் உயிரிழந்தனர்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.