உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 11, 2026 02:33 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லி சாகேத் நீதிமன்றத்தில், 27வது நீதிமன்ற அறையின் நிர்வாக எழுத்தர் ஹரீஷ் சிங் மஹர். நீதிமன்றத்தின் ஏ பிளாக் 5வது மாடியில் இருந்து நேற்று முன் தினம் குதித்து தற்கொலை செய்தார்.
மஹர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்வதாக கூறியிருந்தார். இது, நீதிமன்ற ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடக்க இருந்த லோக் அதாலத் பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் அழைப்பின் பேரில், டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவை, சாகேத் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். இதையடுத்து, வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
