ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
ADDED : ஜூன் 28, 2024 12:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், இன்று ( ஜூன் 28) ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.