பெண் அதிகாரிக்கு நிரந்தர பணி கடற்படைக்கு கோர்ட் உத்தரவு
பெண் அதிகாரிக்கு நிரந்தர பணி கடற்படைக்கு கோர்ட் உத்தரவு
ADDED : மே 21, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடற்படை சட்டப் பிரிவில், ஜே.ஏ.ஜி., எனப்படும் 'ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலாக' 2007ல் சீமா சவுத்ரி என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார். பல பதவி உயர்வுகளை பெற்ற நிலையில், 2021ல் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்தது. நிரந்தர பணி கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீமா வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நிரந்தர பணி வழங்கும்படி கடந்தாண்டு பிப்ரவரயில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல காரணங்களைக் கூறி, நிரந்தர பணி வழங்கவில்லை.
இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
'ஏதாவது காரணத்தை கூறுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு வாரத்துக்குள் அவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.