ADDED : நவ 07, 2024 01:40 AM
ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்பு கொண்டதாகவும் கட்சி மாறுவதற்காக தலா 25 லட்ச ரூபாய் பேரம் பேசியதாகவும் ஆதிஷி கூறியிருந்தார். இதை கண்டித்த பா.ஜ., செய்தித்தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் ஆதிஷி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆதிஷிக்கு மே 28ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலை இந்த வழக்கில் சேர்க்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆதிஷி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விஷால் கோக்னே முன் நடந்தது. அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய முதல்வர் ஆதிஷி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று வரும் 22ம் தேதி வரை அவகாசம் அளித்து நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.