தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு


UPDATED : ஆக 18, 2025 05:18 PM

ADDED : ஆக 18, 2025 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2025 05:18 PM ADDED : ஆக 18, 2025 03:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஜக்தீப் தன்கர் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ம் தேதி நடக்க உள்ளது. இதில் தேஜ கூட்டணி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று( ஆகஸ்ட் 18) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவரின் அனுபவம் நமது நாட்டை வளப்படுத்தும். அவர் எப்போதும் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.



ஜெகன்மோகன் ஆதரவு

இந்நிலையில், தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us