ஆக்கப்பூர்வமான லோக்சபா கூட்டத் தொடர்: சபாநாயகர் பெருமிதம்
ஆக்கப்பூர்வமான லோக்சபா கூட்டத் தொடர்: சபாநாயகர் பெருமிதம்
ADDED : ஜூலை 03, 2024 01:42 PM

புதுடில்லி : ‛‛18 வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் 103 சதவீதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது '' என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
18 வது லோக்சபா அமைக்கப்பட்டதும் அதன் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ல் துவங்கி நேற்று ( ஜூலை 02) நிறைவு பெற்றது. கடந்த 27 ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதன் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார்.
இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லா சார்பில், லோக்சபா செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: லோக்சபா கூட்டத் தொடர் 103 சதவீதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. 34 மணி நேரம் 7 அமர்வுகளாக நடந்தது. ஜூன் 26 ல் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. அன்றைய தினம், அமைச்சர்களை, பிரதமர் மோடி லோக்சபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கூட்டத்தொடரில் 539 எம்.பி.,க்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 68 உறுப்பினர்கள் பேசினர். 18 மணி நேரம் இந்த விவாதம் நீடித்தது. 377 வது விதியின் கீழ் 41 விவகாரங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. 73 ஏ விதியின் கீழ் 3 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், 338 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.