*இல்லத்தரசி தற்கொலை
பெங்களூரு காட்டன்பேட்டில் வசிப்பவர் முரளி மோகன், 39. இவரது மனைவி கீதா, 37. இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த கீதா, நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
*ஏரியில் மூழ்கி 3 பேர் பலி
ராம்நகரை சேர்ந்தவர் ரம்யா, 24. பெங்களூரு ரூரல் சந்தாபூரின் அபிலாஷ், 21, கோலார் சீனிவாசப்பூரின் ரஞ்சித், 27. மூன்று பேரும் உறவினர்கள். சிக்கபல்லாபூர் கம்பத்தனஹள்ளியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு, தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று முன்தினம் சென்றனர். நேற்று மாலை கிராமத்தில் உள்ள ஏரியில் மூன்று பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். நீச்சல் தெரியாமல் மூவரும் ஏரியில் மூழ்கி இறந்தனர்.
*வாலிபர் மீது தாக்குதல்
தட்சிண கன்னடாவின் சுள்ளியா டவுனில் வசிப்பவர் நியாஸ், 22. இவர் இன்னொரு மதத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, வாட்ஸாப்பில் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பினர். இதுபற்றி அறிந்த இளம்பெண் உறவினர்கள் நியாசை பிடித்து தாக்கினர். பலத்த காயம் அடைந்தவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுள்ளியா போலீசார் விசாரிக்கின்றனர்.
*மாடு முட்டியதில் வாலிபர் பலி
உத்தர கன்னடாவின் முண்டகோடில் தீபாவளியை ஒட்டி மாடுகளை ஓடவிடும் போட்டி நேற்று நடந்தது. இலக்கை நோக்கி மாடுகள் சீறப்பாயந்தன, அப்போது மாடு முட்டியதில் பரமேஷ் சித்தப்பா, 25 என்பவர் இறந்தார்.