தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிரைம் கார்னர்: புதுடில்லி

 கிரைம் கார்னர்: புதுடில்லி

 கிரைம் கார்னர்: புதுடில்லி


ADDED : ஏப் 24, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:

டில்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படும் ஹிந்து கல்லுாரியில் நேற்று தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்களால், அந்த தீ, உடனடியாக அணைக்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நேற்று காலை, 11:23க்கு டில்லி தீயணைப்பு துறையினருக்கு, ஹிந்து கல்லுாரியில் தீ பிடித்தது என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதிக்கு, தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிற பகுதிகளில் தண்ணீர் ஊற்றி, குளிர்விக்கப்பட்டது. இதனால், கம்ப்யூட்டர் அறையில் பற்றிய தீ, பரவாமல் தடுக்கப்பட்டது.

டில்லி பல்கலைக்கழகத்தின் ஆத்மா ராம் சனாதன் தர்மா கல்லுாரியில் சில நாட்களுக்கு முன், தீப்பிடித்தது. அதன் பின், நேற்று காலையில், ஹிந்து கல்லுாரியின் கம்ப்யூட்டர் வளாகத்தில் பற்றிய தீ, உடனடியாக அணைக்கப்பட்டது.

புதுடில்லி:

பெண்ணை மிரட்டி, பணம் பறித்த நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த, 2020ம் ஆண்டு வாக்கில், ராகேஷ் சர்மா என்பவர் நடத்தி வந்த யோகா வகுப்பிற்கு, இளம்பெண் ஒருவர் சென்று வந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு தெரியாமல், நெருக்கமாக இருந்தது போன்ற படங்களை எடுத்த ராகேஷ் சிங், அந்த படங்களை காட்டி மிரட்டி, அந்த பெண்ணிடம் இருந்து, 2 லட்ச ரூபாயை பறித்தார்.

ஒரு கட்டத்தில் பணம் தர அந்த பெண் மறுத்ததால், அவரின் கணவருக்கு, நெருக்கமாக இருக்கும் படங்களை அனுப்பி, 15 லட்ச ரூபாயை கேட்டு மிரட்டல் விடுத்தார்.

அந்த பெண்ணும், அவரின் கணவரும் கண்டு கொள்ளாததால், அவரை கொல்ல முயன்றுள்ளார். ஏற்கனவே, பாலம் விஹார் போலீஸ் நிலையத்தில் பெண்ணை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், ராகேஷ் சர்மாவை கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த மொபைல் போனை பெற்ற போலீசார், அதிலிருந்த ஆபாச படங்களை அழித்தனர்.

முன்னதாக, யோகா வகுப்பு நடத்தி வந்ததற்கு முன், உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கில், 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த ராகேஷ் சர்மா, ஜாமின் பெற்று, கொரோனா காலத்தில், யோகா ஆசிரியராக பல முறைகேடுகளை செய்து வந்தார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

புதுடில்லி:

பீஹாரின் மதுபானி என்ற பகுதியை சேர்ந்த முகமது அடில் அன்சாரி என்ற டெய்லர், சிறுவன் ஒருவனை டில்லியின் தப்ரி என்ற பகுதியிலிருந்து கடத்தி சென்றார். அவர் அந்த சிறுவனை கடத்திய, ஐந்து மணி நேரத்தில், மதுபானியிலிருந்து, அந்த சிறுவனை போலீசார் மீட்டனர். அவரை கடத்திய அன்சாரி என்ற அந்த டெய்லரையும் போலீசார் கைது செய்தனர்.

ஐந்து மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசாரை, சக அதிகாரிகள் பாராட்டினர்.

புதுடில்லி:

கிழக்கு டில்லியின் கிருஷ்ணாநகர் பகுதியில், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், நசீம் என்பவர், அவரின் நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்டார். நேற்று முன்தினம், இரவு, 9:00 மணிக்கு நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நசீம், ஹெட்கேவார் ஆரோக்கிய சன்ஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், அந்த மருத்துவமனையிலிருந்து, குரு டெக் பகதுார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நதீம், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக போலீசார் கூறினர்.

புதுடில்லி:

மத்திய டில்லியின் கரோல் பாக் பகுதியில், அரசு மருத்துவமனையில், நேற்று அதிகாலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற நபர் மீது போலீசார், துப்பாக்கியால் சுட்டதில், படுகாயம் அடைந்த அந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

லேடி ஹர்டிங்கே மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை, 3:55 மணிக்கு, ஆனந்த் பர்பாத் என்ற இடத்தை சேர்ந்த ரோஹித் என்ற நபர், அங்கிருந்து தப்ப முயன்றார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில், போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது, அவரை போலீசார், துப்பாக்கியால் சுட்டனர்.

படுகாயமடைந்த அவர் மீது, காவலில் இருந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லேசாக காயம் அடைந்தார். அவரை துப்பாக்கியால் சுட்ட இடத்திலிருந்து, சில துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us