sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜன 22, 2024 06:20 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவியை கொன்ற கணவர்

மைசூரு நஞ்சன்கூடு கொத்தனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரவி, 25. இவரது மனைவி மாச்சி, 22. கடந்த சில நாட்களாக, ரவி வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையில் சண்டை உண்டானது. குடிக்க வேண்டாம் என்று கணவனுக்கு, மனைவி அறிவுரை கூறினார். ஆத்திரம் அடைந்த ரவி, கத்தியை எடுத்து மாச்சியை, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். பலத்த வெட்டு காயம் அடைந்த மாச்சி இறந்தார்.

தாத்தாவுக்கு மிரட்டல்; பேரன் கைது

மைசூரு டவுன் பன்னுார் சாலையில் வசிப்பவர் சங்கரலிங்கய்யா, 87. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி நாகரத்னா, 80. இந்த தம்பதியின் மகள் வழி பேரன் அபிலாஷ், 33. கடந்த ஆண்டு டிசம்பரில் தாத்தா, பாட்டியிடம் இருந்து, தொழில் துவங்குவதாக கூறி அபிலாஷ் 90 லட்சம் ரூபாய், கடனாக வாங்கி இருந்தார்.

ஆனால் அவர் தொழில் துவங்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை, சங்கரலிங்கய்யாவும், நாகரத்னாவும் திருப்பி கேட்டு உள்ளனர். கோபம் அடைந்த அபிலாஷ் பணத்தை தர மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதுகுறித்து சங்கரலிங்கய்யா அளித்த புகாரில், லட்சுமிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாசில்தாரை தாக்க முயன்ற இருவர்

தட்சிண கன்னடா பெல்தங்கடி மடக்கா கிராமத்தில், அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக, பெல்தங்கடி தாசில்தார் பிரித்வி சானிகாமுக்கு தகவல் கிடைத்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை, அரசு நிலத்தை ஆய்வு செய்ய சென்றார். ஆனால் அவரை ஆய்வு செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர் மீது தாக்குதல் நடத்தவும் இருவர் முயற்சி செய்தனர். இதுகுறித்த புகாரின்படி, நசீர், ரவுப் ஆகிய, இருவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

பட்டா கத்தியுடன் வீடியோ

பெங்களூரு ஹுலிமாவில் வசிப்பவர் சஷாங்க், 26. ரவுடி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கையில் பட்டா கத்தி வைத்து, ரீல்ஸ் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுபற்றி அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம், சஷாங்க்கை கைது செய்தனர்.

பெண்ணை தாக்கிய டிரைவர்

பெங்களூரு ஒயிட்பீல்டில் வசிப்பவர் 30 வயது இளம்பெண். ஒயிட்பீல்டில் இருந்து துாபரஹள்ளி செல்ல, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ முன்பதிவு செய்தார். ஆனால் ஆட்டோ வந்ததும் முன்பதிவை ரத்து செய்தார். இதனால் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர், அந்த பெண்ணை தாக்கிவிட்டு தப்பினார். சம்பவம் குறித்து அவரது தோழி 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின், ஒடயரஹள்ளியில் வசித்த ரேணுகப்பா, 37, பம்ப்செட் மற்றும் வீடுகளில் மின் இணைப்பு ஏற்படுத்தும் பணி செய்தார். இவர் நேற்று, கிராமத்தில் தெரு விளக்கை சரி செய்வதில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் தீ

ஹாசன் நகரின், சங்கர மடம் சாலையில் உள்ள மஞ்சுநாத் மருத்துவமனையின், எக்ஸ் ரே அறையில் திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வெளியே வந்தனர். முன்னெச்சரிக்கையாக நோயாளிகள், மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

போதையில் கும்பல் அட்டகாசம்

கோலாரின் கொண்டராஜனஹள்ளியில், நேற்று முன் தினம் நள்ளிரவு, மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்தனர். இதை தட்டிக்கேட்ட நபரின் கையை கடித்து காயப்படுத்தினர். கிராமத்தினர் அந்த இளைஞர்களை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்

சிலிண்டர் வெடித்து பெண் பலி

சித்ரதுர்கா, ஹொல்கரேவின், ஹொசஹள்ளியில் வசிக்கும் பரமேஷ் என்பவர், நடைபாதை ஹோட்டல் நடத்துகிறார். நேற்று மாலை ஹோட்டலில் தீப்பிடித்தது. இதை கண்ட பெண் தொழிலாளிகள், தீயை கட்டுப்படுத்த உதவிக்கு சென்றனர். அப்போது காஸ் சிலிண்டர் வெடித்ததில், லட்சுமம்மா, 38 என்பவர், உயிரிழந்தார். இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.






      Dinamalar
      Follow us