sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : பிப் 07, 2024 04:13 AM

Google News

ADDED : பிப் 07, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகுமார் மீது வழக்குபதிய உத்தரவு


ஹுப்பள்ளி கர சேவகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ., தலைவர்கள் சிலர், 'நாங்களும் கரசேவகர்கள், எங்களை கைது செய்யுங்கள்' என்று, பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். அந்த பதாகையை வேறு விதமாக, காங்கிரஸ் தலைவர் சித்தரித்தனர். சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை துணை முதல்வர் சிவகுமார் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் இரு பிரிவினர் இடையில், சண்டை மூட்டும் வகையில் இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், சிவகுமார் மீது மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜே.பிரீத், சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய, ைஹகிரவுண்ட்ஸ் போலீசாருக்கு நேற்று உத்தரவிட்ட.ெ

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் காந்தேஸ்வர் நகரில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பிரேமலதா, 35. குடும்ப தகராறில் நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பிரேமலதாவை கொன்று, உடலை துாக்கில் தொங்கவிட்டதாக, சிவசங்கர் மீது, குற்றச்சாட்டு எழுந்தது. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவன் சிலையில் எழுதிய மாணவர்


உத்தர கன்னடா சிர்சி நரபைல் கிராமத்தில், சோமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை மீது, கடந்த 4 ம் தேதி சாக்பீசால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் 17 வயது மாணவனை பிடித்தனர். விசாரணையில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வேண்டி, சாமி மீது எழுதியதாக கூறினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

நிலம் ஆக்கிரமித்த ரவுடி


பெங்களூரு பேடரஹள்ளியில் வசிப்பவர் ஜேடரஹள்ளி கிருஷ்ணப்பா, 51. ரவுடியான இவர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பேடரஹள்ளியில் 16 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்ததாக, ஜேடரஹள்ளி கிருஷ்ணப்பா மீது, சமூக ஆர்வலர் ஒருவர், ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

கார் கவிழ்ந்து 2 பேர் பலி


தாவணகெரேயை சேர்ந்தவர்கள் முத்துசாமி, 69, பாண்டுரங்கா, 32. இவர்கள் இருவரும் நேற்று காலை, தாவணகெரேயில் இருந்து பெங்களூரு நோக்கி, காரில் சென்றனர். சித்ரதுர்கா அருகே சென்ற போது காரின் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த இருவரும் உயிரிழந்தனர்.

ரயிலில் அடிபட்டு மாணவர் சாவு


பெங்களூரு எலஹங்கா அருகே கொத்தனுாரில் வசித்தவர் சிவசூர்யா, 19. எலஹங்காவில் உள்ள, தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படித்தார். கடந்த 3 ம் தேதி இரவு, காதில் ஹெட்போன் அணிந்து, கல்லுாரி அருகில் உள்ள, ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த, ரயில் மோதி உயிரிழந்தார். ஹெட்போன் அணிந்திருந்ததால் ரயில் வரும் சத்தம் கேட்காமல், ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தாமதமாக நேற்று தான் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர் தற்கொலை


ஹாசன் டவுன் விஜயநகரில் வசித்தவர் அருண், 28. ஆலுார் தாலுகா அலுவலகத்தில், இரண்டாம் நிலை ஊழியராக வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அருண், திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகள் தொல்லை காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

கர்ப்பிணி மர்ம சாவு


துமகூரு சிக்கநாயக்கனஹள்ளி பொம்மேனஹள்ளியின் பிரசாத், 40. இவரது மனைவி சவுமியா, 22. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மர்மமான முறையில் துாக்கில் தொங்கினார். குடும்ப தகராறில் சவுமியாவை கொன்று, துாக்கில் தொங்கவிட்டதாக, கணவர் குடும்பத்தினர் மீது, சவுமியா பெற்றோர் புகார் செய்தனர். நோவினகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.

காவலாளி தற்கொலை


நேபாளத்தை சேர்ந்தவர் பிக்ரம், 22. பெங்களூரு தொட்டகம்மனஹள்ளியில், மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. மனைவி துாங்கிய பின்னர், தான் வசித்து வந்த வீட்டின், நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து பிக்ரம் தற்கொலை செய்து கொண்டார்.

கணவன் கொலையில் மனைவி கைது


ஹுப்பள்ளி பஞ்சாரா காலனியில் வசித்தவர் சந்திரசேகர் லமானி, 40. கடந்த மாதம் 10 ம் தேதி ஹுப்பள்ளி ஏ.பி.எம்.சி., மார்க்கெட் சாலையில், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் சந்திரசேகரை கொன்றதாக, அவரது மனைவி மஞ்சுளா, 38, கள்ளக்காதலன் ரியாஸ் அகமது, 40 கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலை கண்டித்ததால், தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

வேலை மோசடியில் 2 பேர் கைது


பெங்களூரு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி, பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வித்யரண்யபுரா ஹரிஷ், 21, ஸ்ரீநகர் தீபக், 22 ஆகியோரை, பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஒரு பெண் அளித்த புகாரில் இருவரும் சிக்கினர்.

செத்து மிதந்த 10,000 மீன்கள் சாவு


ராம்நகர் மாகடி மரலகொண்டா கிராமத்தில் வசிப்பவர் உமேஷ். மீன் பண்ணை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, மீன் பண்ணைக்குள் புகுந்த மர்மநபர்கள், தண்ணீர் தொட்டிக்குள் விஷத்தை கலந்தனர். அந்த தண்ணீர் குடித்த 10,000 மீன்கள் செத்து மிதந்தது. மாகடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us