வி
பத்தில் கேஷியர் பலி
பெங்களூரு நாகசந்திராவில் வசித்த ராஜேந்திரா, 50, தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார். இவர் நேற்று காலை, பணி நிமித்தமாக யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஸ்கூட்டரில் செல்லும் போது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
தங்க தாலி திருட்டு
மைசூரு விஜயநகர் இரண்டாவது ஸ்டேஜில் வசிப்பவர் ஜோதி. இவர் பீரோவில் 2.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தாலி வைத்திருந்தார். இது திருட்டு போயுள்ளது. இவரது வீட்டில் பணியாற்றும் ரேகா, திடீரென பணியில் நின்றுவிட்டார். அவரே திருடியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இளம்பெண் தற்கொலை
பெங்களரு, ராஜகோபாலநகரின், மோகன் திரையங்கு அருகில் வசிப்பவர் பிரவீன், 30. இவரது மனைவி காவ்யா, 22. இவர் நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகத்தின் அடிப்படையில், கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் மீது தாக்கு
உடுப்பியின், மல்பே போலீஸ் நிலைய எஸ்.ஐ., சுஷ்மா, நேற்று அதிகாலை, ஊர்க்காவல் படை ஊழியர் ஜாதவுடன், கதிகே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பள்ளி அருகில் இளைஞர் கும்பல், தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை விசாரித்த எஸ்.ஐ.,யை மிரட்டி, கற்களை வீசி தாக்கினர். சுஷ்மாவும், ஜாதவும் பள்ளிக்குள் ஓடி சென்று தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
பால் பவுடர் பறிமுதல்
பீதர், அவுராதின், சந்தபுரம் கிராமத்தின் கடையொன்றில், அங்கன்வாடிக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பால் பவுடர் விற்பதாக தகவல் கிடைத்தது. நேற்று மதியம் அங்கு சென்று சோதனையிட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், 28,000 ரூபாய் மதிப்புள்ள பால் பவுடரை பறிமுதல் செய்தனர்.