போதையில் பள்ளி வேன்களை ஓட்டிய 16 டிரைவர்கள் மீது கிரிமினல் வழக்கு
போதையில் பள்ளி வேன்களை ஓட்டிய 16 டிரைவர்கள் மீது கிரிமினல் வழக்கு
ADDED : ஜன 24, 2024 05:52 AM

பெங்களூரு : பெங்களூரில் குடிபோதையில் பள்ளி வேன்கள் ஓட்டிய, டிரைவர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரில் பள்ளி வேன்களை ஓட்டும் டிரைவர்கள், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாக, போக்குவரத்து போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து நேற்று காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை, பெங்களூரு நகர் முழுவதும் போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளி வேன்களை மறித்து, டிரைவர்கள் குடிபோதையில் உள்ளனரா என்று சோதனை நடத்தினர்.
அப்போது 16 டிரைவர்கள் குடிபோதையில், பள்ளி வாகனங்களை இயக்கியது தெரிந்தது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்ய, பரிந்துரை செய்து உள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகங்களுக்கும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

