ADDED : ஆக 19, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; தலைமறைவான போக்சோ குற்றவாளியை, நான்கு ஆண்டுகளுக்கு பின், திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சிற்றிலஞ்சேரியை சேர்ந்தவர் சிவகுமார், 51. இவர், 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 2021ல் ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். போலீசார் தேடினர். இவரை தமிழகத்தில், திருவண்ணாமலை கோவில் அருகே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஜாமினில் வெளியே வந்த சிவகுமார் தமிழகத்துக்கு தப்பியுள்ளார். இவரிடம் மொபைல்போன் இல்லை. இவரை பிடிக்கும் பணி சவாலாக இருந்தது. சிவகுமார் பிடிபட்டபோது, நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த தோற்றத்திலிருந்து நிறைய மாறியிருந்தார். தாடி வளர்ந்து துறவி போல சுற்றி திரிந்துள்ளார்' என்றனர்.