sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்பு வாரிய நில விவகாரத்தில் காங்., அரசுக்கு நெருக்கடி! மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்

/

வக்பு வாரிய நில விவகாரத்தில் காங்., அரசுக்கு நெருக்கடி! மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்

வக்பு வாரிய நில விவகாரத்தில் காங்., அரசுக்கு நெருக்கடி! மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்

வக்பு வாரிய நில விவகாரத்தில் காங்., அரசுக்கு நெருக்கடி! மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்


ADDED : நவ 04, 2024 10:01 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் வக்பு விவகாரம், நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கிறது. விவசாயிகள் நிலத்தை வக்பு நிலமாக மாற்ற முயற்சி செய்யும் அமைச்சர் ஜமீர் அகமது கான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சியான பா.ஜ., நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது. அரசுக்கு அக்கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவில், வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றில் நடந்த முறைகேடு ஆகியவை, சில மாதங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

முடா முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதால், அவர் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி துாக்கி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இருந்து எப்படி மீள்வது என்பது தெரியாமல் முதல்வர் சித்தராமையா பரிதவிக்கிறார். இந்த விவகாரங்களுடன், வக்பு விவகாரமும் இப்போது சேர்ந்துள்ளது. இதனால் காங்கிரஸ் அரசுக்கும் அதன் தலைவர்களுக்கும் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

விவசாயம்


மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள், அரசு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பது, நில ஆவணங்களின் ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

எனவே விவசாயிகளுக்கு நோட்டீஸ் அளித்து, நிலத்தை மீட்டு வக்பு வாரியத்தில் சேர்க்க, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

காலங்காலமாக விவசாயம் செய்யும் விவசாயிகளை வெளியேற்ற முற்படுவதை விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் வன்மையாக கண்டித்துள்ளன. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகின்றன.

அமைச்சர் ஜமீர் அகமது கானை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென, அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

விவகாரம் பெரிதாவதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, விவசாயிகளுக்கு அளித்த நோட்டீஸ்களை திரும்பப் பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஜமீர் அகமது கான் பதவியை ராஜினாமா செய்யவும்; விவசாயிகள், சங்க, அமைப்புகள், மடங்கள் சார்ந்த சொத்து ஆவணங்களில் வக்பு என குறிப்பிட்டுள்ளதை நீக்கவும் வலியுறுத்தி, பா.ஜ.,வினர் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு, சித்ரதுர்கா, ஷிவமொக்கா, தாவணகெரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவி, கலபுரகி, பல்லாரி உட்பட, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

பல்லாரியில் நடந்த போராட்டத்திற்கு மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமை தாங்கினார். பெங்களூரின் கே.ஆர்., புரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில் போராட்டம் நடந்தது.

எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட, பலரும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் முன்னால் போராட்டம் நடத்தினர்.

பல்லாரியில் நடந்த போராட்டத்தில் விஜயேந்திராவுடன், எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, எம்.பி., கோவிந்த் கார்ஜோள், சண்டூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பங்காரு ஹனுமந்து என, பல தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது விஜயேந்திரா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, என்ன கூறினாரோ, அதேதான் இப்போது நடக்கிறது. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் சொத்துகளை பறித்துக் கொள்ளும்' என, கூறியிருந்தார். அது இன்று உண்மையாகிறது.

இதுவரை நோட்டீசே அளிக்கவில்லை என, கூறி வந்த அரசு, விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய பின், 'நோட்டீஸ் அளிக்காதீர்கள்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எங்கு செல்வது


'மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் கேள்வி எழுப்புவர் என்ற பீதியில், இப்போது நோட்டீஸ் அளிக்க வேண்டாம்' என, உத்தரவிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பின், மீண்டும் நோட்டீஸ் அளிப்பர்.

எங்களின் போராட்டம், எந்த நபர் அல்லது மதத்துக்கு எதிரானது அல்ல. நமது ஹிந்துக்களின் சொத்துகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே, எங்களின் நோக்கம். விவசாயிகளின் நிலம், கோவில், சமுதாய பவன், கட்டடங்கள், பள்ளிகள் என, அனைத்துக்கும் நோட்டீஸ் அளித்தால், நாம் எங்கு செல்வது?

இவ்வாறு அவர் பேசினார்.

கே.ஆர்.புரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:

ஹிந்துக்களுக்கு சொந்தமான சொத்துகளை பறித்து, வக்பு வாரியத்தில் சேர்க்க அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, அதிகாரம் கொடுத்தது யார்? வக்பு வாரியத்துக்கு, சொத்துகளை அளிக்க வேண்டும் என, அவருக்கு ஆசை இருந்தால், தனக்கு சொந்தமான சொத்துகளை கொடுக்கட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

விதான்சவுதாவில் மூன்று அமைச்சர்கள், ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, 'நாங்கள் எந்த நோட்டீசும் அளிக்கமாட்டோம்' என்றனர். ஆனால் அதற்கு பின்னரும், விவசாய நிலம், கோவில்கள் உட்பட, பலருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இதுகுறித்து நாங்கள் அரசியல் செய்வதாக, குற்றஞ்சாட்டுகின்றனர். இது மாநிலத்தின் துர்பாக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வினரின் கோரிக்கைகள்

l 1974ல் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யுங்கள்

l தற்போது விவசாயிகளுக்கு அளித்துள்ள நோட்டீசை திரும்ப பெறுங்கள்

l இனி எந்த விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அளிக்கக் கூடாது

l விவசாயிகளின் நிலத்தில் வக்பு வாரிய சொத்து என, பதிவான ஆவணங்கள், விவசாயிகள் பெயரில் இருக்க வேண்டும்

l நோட்டீஸ் அளித்த அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

l விவசாயிகளுக்கு எதிராக செயல்படும், அவர்களுக்கு நோட்டீஸ் அளித்த ஜமீர் அகமது கான் பதவியை பறிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us