குமாரசாமி மீது விமர்சனம்; மன்னிப்பு கேட்டார் ஜமீர்
குமாரசாமி மீது விமர்சனம்; மன்னிப்பு கேட்டார் ஜமீர்
ADDED : நவ 12, 2024 07:41 PM

மைசூரு ; மைசூரில் நேற்று, ஜமீர் அகமது கான் அளித்த பேட்டி:
நானும், குமாரசாமியும் முன்னாள் நண்பர்கள். நான் ம.ஜ.த.,வில் இருந்தவன். அந்த கட்சியில் இருந்தபோது, ஒரு நாளைக்கு 14 மணி நேரம் குமாரசாமியுடன் இருந்துள்ளேன். அவர் என்னை 'குள்ளன்' என்று கிண்டலாக கூறுவார்.
நானும் அவரை, 'கருப்பர்' என்று கூறி இருக்கிறேன். அதுபோன்று தேர்தல் பிரசாரத்தின் போதும், கருப்பர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். இது யதார்த்தமாக கூறியது தான்.
ஆனால் என் வார்த்தை, ம.ஜ.த., கட்சியினரை காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பயன்படுத்திய வார்த்தை, சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேவகவுடா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், முஸ்லிம்கள் ஓட்டு தங்களுக்கு தேவை இல்லை என்று குமாரசாமி கூறினார். ஆனால் இப்போது மகனை வெற்றி பெற வைக்க, முஸ்லிம் ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்க நினைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.