'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விமர்சனம்; செய்தியாளர் வீட்டில் 'போலீஸ் ரெய்டு'
'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விமர்சனம்; செய்தியாளர் வீட்டில் 'போலீஸ் ரெய்டு'
ADDED : மே 13, 2025 06:22 AM

திருவனந்தபுரம்: 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விமர்சித்து வலைத்தளங்களில் பதிவிட்ட மும்பையைச் சேர்ந்த செய்தியாளர் வீட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் ரிஜாஸ் சித்திக், 28. மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார்.
பயங்கரவாதிகள் புகலிடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய ஆப்பரேஷன் சிந்துார் பற்றி விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார்.
நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை போலீசார், ரிஜாஸ் சித்திக்கை கைது செய்தனர். அவருடன் இருந்த பீஹாரைச் சேர்ந்த இளம் பெண் இஷா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை போலீசார், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரிஜாஸ் சித்திக்கின் வீட்டில் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரிஜாஸ் சித்திக், ஜனநாயக மாணவர்கள் சங்க பிரதிநிதியாக இருந்து வருகிறார். சமீபத்தில், கொச்சியில் நடந்த காஷ்மீர் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, போலீசார் இவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.