பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது: சரத்பவார் பேட்டி
பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது: சரத்பவார் பேட்டி
ADDED : ஜன 09, 2024 04:55 PM

புதுடில்லி: இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர். வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் அவர்கள் இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது.
பிரதமர் பதவிக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்கு வெளியே இருந்து இந்திய பிரதமர் விமர்சிக்கப்படுவாரானால் நாங்கள் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
கார்கே பேட்டி
இதனிடையே, மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விவகாரங்களில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். நேரத்துக்கு ஏற்றார்போல நாம் நடந்துகொள்ள வேண்டும். நாம் அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.