சந்திரபாபு குறித்து விமர்சனம்: ஜெகன் மோகனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
சந்திரபாபு குறித்து விமர்சனம்: ஜெகன் மோகனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
ADDED : ஏப் 07, 2024 05:40 PM

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இழிவாக விமர்சனம் செய்ததாக அக்கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே போட்டி உள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, பிரசாரத்தின் போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் சந்திரபாபு நாயுடுவை வழக்கமான குற்றவாளி எனவும், அருந்ததி பட வில்லனுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது.
இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தேர்தல் ஆணையம், 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளது.

