மனைவியின் சமையல், உடை பற்றி விமர்சிப்பது குற்றமல்ல: ஐகோர்ட் தீர்ப்பு
மனைவியின் சமையல், உடை பற்றி விமர்சிப்பது குற்றமல்ல: ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 10, 2025 12:31 AM

மும்பை: 'மனைவி உடுத்தும் உடை, சமையல் பற்றி விமர்சிப்பது கிரிமினல் குற்றமாகாது' என, மு ம்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2013ல் விவாகரத்து நடந்தது.
இதைத் தொடர்ந்து, அதே ஊரைச் சேர்ந்த நபரை இரண்டாவதாக 2022ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒன்றரை மாதங்கள் மட்டுமே இந்த திருமண உறவு நீடித்தது.
கிரிமினல் வழக்கு அதற்குள் கணவரிடம் இருந்து பிரிந்த அப்பெண், புகுந்த வீட்டில் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என புகார் எழுப்பினார்.
மேலும், கணவருக்கு இருந்த மனநல பாதிப்பை மறைத்து திருமணம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி, போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப் படையில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், கணவர் மற்றும் அவரது வீட்டாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
அதன் விபரம்:
உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவினை ஏற்பட்டாலே, ஒருவர் மீது ஒருவர் மிகைப்படுத்தி குற்றஞ்சாட்டுவது இயல்பானதாகி விடுகிறது.
திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கு இருக்கும் நிறை, குறைகள் பற்றி மறைக்காமல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதை மறைத்ததாக கூறியுள்ள புகார் ஏற்கும்படியாக இல்லை.
த விர, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ - பிரிவின் கீழ், இதை குற்றமாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனைவியின் சமையல், உடுத்தியிருக்கும் உடை பற்றி விமர்சிப்பதையும் குற்றமாக கருத முடியாது.
முரண்பாடு ஒருவேளை அதை குற்றமாக கருதி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அது சட்ட நடைமுறைக்கு எதிரானது.
கணவர் மற்றும் அவரது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் மட்டுமே, இந்திய தண்டனைச் சட்டம் 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
பெண்ணின் குற்றச்சாட்டுகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இவ்வழக்கை ரத்து செய்கிறோம்.
இ வ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.