ADDED : ஜன 08, 2026 11:55 PM

சபரிமலை: ச பரிமலையில் பக்தர்கள் வருகை மிக அதிக மானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
சபரிமலைக்கு மண்டல காலத்தை விட, மகர விளக்கு சீசனில் பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
இவர்கள் ஒரு குறிப்பி ட்ட நா ளில் முன்பதிவு செய்து இருந்தாலும் முழுக்க முழுக்க உள் வனப்பகுதியில் இந்த பாதை அமைந்துள்ளதால் ஓய்வெடுத்து வரும்போது தாமதம் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 12,200 பக்தர்கள் பெருவழி பாதை வழியாக பம்பை வந்தனர். இதனுடன் நிலக்கல் பம்பை வழியாக பதிவு செய்த பக்தர்களும் வந்த போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டன. பம்பையிலும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பம்பையில் இருந்து மலையேறிய பின்னரும் தரிசனத்தி ற்காக 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மு ன்பதிவின்படி குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் வராததே இதற்கு காரணம். நேற்று மாலைக்கு பின்னர் பம்பையில் கூட்டம் சற்று குறைந்தது. எனினும் சன்னிதானத்தில் கூட்டம் குறையவில்லை.

