பிரதமர் மோடி, ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஒரே காரில் பயணம்
பிரதமர் மோடி, ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஒரே காரில் பயணம்
UPDATED : டிச 16, 2025 02:30 PM
ADDED : டிச 16, 2025 12:48 PM

அம்மான்: ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார். முதலில் அவர் நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். விமான நிலையம் வந்த அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிச.,16) பிரதமர் மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லாவை அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

