ஒரே அடியாக வீழ்ந்தது கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
ஒரே அடியாக வீழ்ந்தது கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
ADDED : செப் 11, 2024 12:25 PM

புதுடில்லி: 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலருக்கும் கீழ் குறைந்தது. ஆனால், பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது.
அதாவது, 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 69.48 டாலராக குறைந்தது. ஆனால், கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.