தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்


ADDED : மார் 04, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் தருவதாக கூறி, பலரை ஏமாற்றி வந்த நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வட மேற்கு டில்லியை சேர்ந்த அனிஷ் கான், 60, சவுத் ஆலம், 46, முகமது ஹருன், 55, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அப்துல் காதிர் என்ற குட்டு ஆகிய நான்கு பேரும், பல மாதங்களாக பலருக்கு கிரிப்டோ கரன்சி தருவதாக ஏமாற்றி வந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தையின் போது, திடீரென போலீஸ் வந்தது போன்று சித்தரித்து, பணத்தை பல மாதங்களாக கொள்ளையடித்து வந்த இந்த நால்வரும் போலீசில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் நால்வரும் அளித்த வாக்குமூலத்தின் படி, தலைமறைவாக உள்ள மும்பையை சேர்ந்த விஷ்ணு, நிலேஷ் மற்றும் டில்லியை சேர்ந்த பாபா சுலேமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us