கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் பணி: 307 பேருக்கு வாய்ப்பு
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் பணி: 307 பேருக்கு வாய்ப்பு
ADDED : அக் 10, 2024 07:33 AM

புதுடில்லி: கொச்சி கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் 307 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23.
கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) என்பது இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும்தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், எலக்ட்ரீஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எலக்ட்ரீஷியன்- 42,
பிட்டர்- 32,
வெல்டர்- 42,
மெஷினிஸ்ட்- 8,
எலக்ட்ரானிக் மெக்கானிக்-13,
இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-12,
Draughtsman- 10,
பெயிண்டர்- 8,
மோட்டார் மெக்கானிக்கல்- 10,
மெட்டல் ஒர்க்கர்- 41,
தச்சர்- 18,
மெக்கானிக்கல்- 10,
பிளம்பர்-32,
ஏர் கண்டிஷனர் மெக்கானிக்- 1,
மரைன் பிட்டர்- 20,
அக்கவுண்டிங்-1
நர்சிங்- 1
கஸ்டமர் ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட் - 2
எலக்ட்ரானிக் டெக்னாலஜி- 1,
ரெஸ்டாரன்ட் மேனேஜ்மென்ட்- 3,
கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ., முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
தேர்வு செய்வது எப்படி?
மதிப்பெண், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

