புற்றுநோய்க்கு சிகிச்சை: ‛ஜெட் ஏர்வேஸ்' நிறுவனருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின்
புற்றுநோய்க்கு சிகிச்சை: ‛ஜெட் ஏர்வேஸ்' நிறுவனருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின்
ADDED : நவ 12, 2024 01:53 AM

மும்பை: வங்கி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக கைதான ‛ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் நரேஷ் கோயல் ,75 மருத்துவ சிகிச்சைக்காக மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.
ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து நிறுவனம் 2017ல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து, 2019ல் விமான சேவை நிறுத்தப்பட்டது. திவாலானதாக அறிவிக்கப்பட்டு, வேறு இரு நிறுவனங்களுக்கு 2021ல் கைமாறியது.
இந்நிலையில், கடன் வாங்கி, ரூ.538 கோடியை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, ஜெட் ஏர்வேஸ், அதன் நிறுவனரான நரேஷ் கோயல், அவருடைய மனைவி அனிதா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, கனரா வங்கி புகார் அளித்தது.
இதனை அமலாக்கத்துறை பணமோசடி வழக்காக பதிவு செய்தது. கடந்தாண்டு செப்டம்பரில் நரேஷ் கோயல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதால் சிகிச்சை எடுத்துக்கொளள வேண்டி ஜாமின் கோரி மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி என். ஜெ., ஜாம்தார், நரேஷ் கோயல், போலீஸ் காவலில் வைத்து சிகிச்சை பெற அனுமதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.