ADDED : அக் 31, 2024 07:18 PM

புதுடில்லி: உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2033ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு லட்சம் கோடி இணையவழி தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
'பிரஹார்' என்ற அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மற்றும் விமான நிலையங்கள் மீது ரகசிய இணைய நிறுவனங்களால் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், இந்தியாவில் டிஜிட்டல் சுற்றுச்சூழலின் விரைவான விரிவாக்கத்தின் அபாயங்களுக்கு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 2023ம் ஆண்டு, 7 கோடியே 90 லட்சம் இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 சதவீதம் அதிகம். நடப்பாண்டின் முதல் காலாண்டில் 500க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சைபர் கிரிமினல்களால் அதிகளவில் குறிவைக்கப்படும் துறைகளில் வலுவான இணைய பாதுகாப்பு தேவை என்பதை இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன.
சைபர் குற்றங்களால் இந்தியர்கள் இந்தாண்டில் இதுவரை ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்திருப்பதாக தேசிய சைபர் கிரைம் இணைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.