sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

/

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு


ADDED : பிப் 06, 2026 06:50 PM

Google News

ADDED : பிப் 06, 2026 06:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: டிஜிட்டல் மோசடிகளை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.

ஒடிசாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது;

நாடு முழுவதும் தற்போது சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் நிதி மோசடிகளால் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த வருவாயை இழக்கின்றனர். இதன் மூலம் மனரீதியாகவும், சமூகத்திலும் அழுத்தங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

கிராமப்புறங்கள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை அறியாத மக்கள் உள்ளனர். அவர்கள் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தற்காத்து கொள்ள, மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது தற்போதைய தேவையாக இருக்கிறது.

டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசானது எடுத்துள்ளது. அதற்காக இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களை அமைத்துள்ளது.

மக்களிடையே டிஜிட்டல் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, அவர்களுக்கு அது பற்றிய அறிவை ஊட்ட வேண்டும். அதற்காகவே அது பற்றிய கல்வி அறிவை அளிக்கும் வகையில் பள்ளிப்பாட திட்டத்தில் ஒரு பகுதியாக கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.






      Dinamalar
      Follow us