தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டிட்வா புயல் அப்டேட் உடனுக்குடன் இதோ; கோடியக்கரையில் கொட்டியது கனமழை

டிட்வா புயல் அப்டேட் உடனுக்குடன் இதோ; கோடியக்கரையில் கொட்டியது கனமழை

டிட்வா புயல் அப்டேட் உடனுக்குடன் இதோ; கோடியக்கரையில் கொட்டியது கனமழை


UPDATED : நவ 29, 2025 10:03 AM

ADDED : நவ 29, 2025 08:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 10:03 AM ADDED : நவ 29, 2025 08:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: டிட்வா புயலால், நாகை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோடியக்கரையில் 250 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான 'டிட்வா' புயல், சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில், சென்னை மற்றும் தமிழக வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

இந்த புயல், நாளை அதிகாலையில் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.

இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8.30 மணி வரை பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

கோடியக்கரை- 250

வேதாரண்யம் -185

வேளாங்கண்ணி- 133

திருப்பூண்டி- 123

நாகப்பட்டினம்- 116

தலைஞாயிறு- 108

பாம்பன்- 74

ராமேஸ்வரம்- 74

தங்கச்சிமடம்- 74

மண்டபம்- 70

இளையான்குடி- 68

திருக்குவளை- 66

தீர்த்தாண்டத்தானம்- 63

சூரங்குடி- 63

வட்டானம்- 54

கடலாடி- 54

திருவாடானை- 53

வாலிநோக்கம்- 52

தொண்டி- 52

மீமிசல்- 52

சிவகாசி- 52

ராமநாதபுரம்- 49

ரெட் அலெர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலெர்ட்

வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.

விமான சேவை பாதிப்பு

புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீர் திறப்பு


பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 2,500 கன அடியாகவும், புழல் ஏரியில் வினாடிக்கு 1,000 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us