மிதுன் சக்கரவர்த்திக்கு 'தாதாசாஹேப் பால்கே' விருது
மிதுன் சக்கரவர்த்திக்கு 'தாதாசாஹேப் பால்கே' விருது
ADDED : அக் 01, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, 'பாலிவுட்' திரையுலகில், 1980களில் புகழ்பெற்று விளங்கிய நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு, திரைத்துறையின் உயரிய விருதான 'தாதாசாஹேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தன் சமூக வலைதள பக்கத்தில் நேற்று உறுதி செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் 'மிதுன் சக்கரவர்த்தி இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'நடிப்புக்காக தலைமுறை தாண்டியும் போற்றப்படும் அவருக்கு வாழ்த்துகள்' என, பதிவிட்டுள்ளார்.