தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'நடனக்காரி ஐஸ்வர்யா ராய்': ராகுல் சர்ச்சை பேச்சு

'நடனக்காரி ஐஸ்வர்யா ராய்': ராகுல் சர்ச்சை பேச்சு

'நடனக்காரி ஐஸ்வர்யா ராய்': ராகுல் சர்ச்சை பேச்சு


ADDED : பிப் 20, 2024 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: காங்., எம்.பி., ராகுல் நடிகை ஐஸ்வர்யா ராயை நடனக்காரி ஐஸ்வர்யா ராய் என கூறியது பேசு பொருளாகி உள்ளது.

எம்.பியாக உள்ள ராகுல் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுவருகிறார். உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் பயணம் மேற்கொண்ட ராகுல் தொடர்ந்து வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: அனைத்து ஊடகங்களும் அம்பானி, அதானி-க்கு சொந்தமானது. அவர்கள் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் பிரச்னைகளை காட்டப் போவதில்லை. அவர்களால் முடியாது. ஊடகங்களில் எதையாவது காட்ட வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராய் நடனம் ஆட வேண்டும். பிரதமரை 24 மணி நேரமும் காட்டவேண்டும். அமிதாப்பச்சனையும் காட்டவேண்டும். என்றார்.

முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி, சமுதாய மக்கள் அழைக்கப்படவில்லை; அவர்கள் ஒதுக்கப்பட்டனர். நடனக்காரி ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆகியோர் தான் அழைக்கப்பட்டனர் என்றார்.ராகுலின் இந்த பேச்சு ஐஸ்வர்யா ராய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us