லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் ஆபத்து : பாதுகாப்பு கேட்கும் பப்பு யாதவ்
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் ஆபத்து : பாதுகாப்பு கேட்கும் பப்பு யாதவ்
ADDED : அக் 29, 2024 12:36 AM

பாட்னா: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக பீஹார் எம்.பி.யுமான பப்பு யாதவ் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு கொலை, அடிதடி, ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும், அவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். தற்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பீஹாரின் பூர்ணியா தொகுதி லோக்சபா எம்.பி..யான பப்பு யாதவ், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆதிரமடைந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் பப்பு யாதவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பூர்ணியா போலீசில் தனக்கு உரிய பாதுகாப்ப தர வேண்டும் என பப்பு யாதவ்கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பீஹார் காவல்துறையில் தனக்கு நம்பிக்கை இல்லை தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் பல தாக்குதல்களை எதிர்கொண்டோம். நேபாளத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் உட்பட பல்வேறு சாதி அடிப்படையிலான குற்றவாளிகள் தன்னை பலமுறை கொல்ல முயன்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.