ADDED : செப் 21, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கொலை வழக்கில் ஜாமின் கேட்டு, நடிகர் தர்ஷன் மனு செய்துள்ளார்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் மீது 3,991 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தர்ஷன் சார்பில் அவரது வக்கீல் சுனில், பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று ஜாமின் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனு மீது நாளை விசாரணை நடக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் தர்ஷனின் தோழி பவித்ரா, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை, செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது கவனிக்கத்தக்கது.