ADDED : மே 05, 2024 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி: அயோத்தி சென்றிருந்த தமிழக கவர்னர் ரவி மனைவியுடன் ராமர்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமஜென்பூமியில் பிரமாண்ட ராமர்கோயிலை கடந்த ஜனவரியில் பாலராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி கோயிலை திறந்து வைத்தார் .
இந்நிலையில் நேற்று தமிழக கவர்னர் ரவி தனது மனைவி லட்சுமியுடன் அயோத்தி சென்றார். அங்கு ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோ, புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.