ADDED : மே 11, 2024 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: திகார் சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டில்லியில் உள்ள ஹனுமன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுபான கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை 'இண்டியா' கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். இதையடுத்து கட்சி தொண்டர்கள் முன் பேசிய கெஜ்ரிவால், இன்று மதியம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சியினர் செய்துள்ளனர்.
இந்நிலையில், டில்லியின் கன்னாட் பேலசில் உள்ள ஹனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன், மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்னும் உடன் சென்றார். கெஜ்ரிவால் வருகையைத் தொடர்ந்து ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.