கள்ளக்காதலனுடன் சிக்கிய மகள்: இருவரையும் கொன்று கிணற்றில் வீச்சு
கள்ளக்காதலனுடன் சிக்கிய மகள்: இருவரையும் கொன்று கிணற்றில் வீச்சு
ADDED : ஆக 27, 2025 02:58 AM

நான்டெட்: மஹாராஷ்டிராவில் திருமணமான கள்ளக் காதலியை சந்திக்க, அவரது மாமியார் வீட்டுக்கு சென்ற காதலன் சிக்கினார். இது குறித்து அறிந்து வந்த பெண்ணின் தந்தை, மகள் மற்றும் அவரது கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசினார்.
மஹாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள காலேகான் கிராமத்தில் வசித்த இளம்பெண் சஞ்சீவனி. இவருக்கு சுதாகர் காமலே என்பவருடன் திருமணமாகி காலே கானில் வசித்தார்.
இந்நிலையில், அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த லகான் பண்டாரே உடன் சஞ்சீவனிக்கு தகாத உறவு இருந்துள்ளது. நேற்று முன்தினம் சஞ்சீவனியை அவரது மாமியார் வீட்டில் சந்திக்க லகான் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சஞ்சீவனியின் மாமியார், காதலனை பிடி த்து வைத்து, சஞ்சீவனியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் தந்தை இருவருடன் வந்து, மகள் சஞ்சீவனி மற்றும் காதலன் லகானை மருமகன் கண் எதிரே அடித்துக் கொன்றுள்ளார். பின் இரு உடல்களையும் கிணற்றில் வீசிவிட்டு தப்பினார்.
இது பற்றிய புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் இருந்து சஞ்சீவனியின் உடலை போலீசார் மீட்டனர்.
காதலன் லகான் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சஞ்சீவனியின் தந்தை, கணவர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

