மும்பையில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜன.5-ல் ஏலம்
மும்பையில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜன.5-ல் ஏலம்
ADDED : ஜன 04, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மும்பையில், பிரபல தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துகள் நாளை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான சொத்துக்கள் , ரத்னகிரி மாவட்டம் கேட் தாலுகாவில் காலி மனைகள் மற்றும் வீடு ஆகியவை உள்ளனர்.
இச்சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையம் வசம் உள்ளது. இசசொத்துக்கள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.