டிடி நியூஸ் லோகா மாற்றம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
டிடி நியூஸ் லோகா மாற்றம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ADDED : ஏப் 20, 2024 05:40 PM

புதுடில்லி: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் டிடி நியூஸ், தனது லோகோவை மாற்றியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
டிடி நியூஸ், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛ எங்கள் மதிப்புகள் அப்படியே இருக்கும் போது, நாங்கள் இப்போது ஒரு புதிய அவதாரத்தில் இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள். புதிய டிடி செய்திகளை என அனுபவியுங்கள் '' எனக்கூறியிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தூர்தர்ஷனின் முன்னாள் தலைவரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யுமான ஜவஹர் சிர்கார் கூறுகையில், தேசிய ஒளிபரப்பு சேவையான தூர்தர்ஷன், தனது வரலாற்று சிறப்பு மிக்க லோகோவின் நிறத்தை காவி நிறத்திற்கு மாறி உள்ளது. முன்னாள் சிஇஓ என்ற முறையில், காவிமயமாகி வருவதை எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறேன். இது இனிமேல் பிரசார் பாரதி அல்ல. பிரசார பாரதி. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனக்கூறியுள்ளார்.
ஆனால், தற்போதைய தூர்தர்ஷன் தலைவர் கவுரவ் திவேதி கூறுகையில், லோகோ நிறம் ஆரஞ்சு எனக்கூறியதுடன்,

