தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் அவமதிப்பு வழக்கில் இறுதிக்கெடு

 பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் அவமதிப்பு வழக்கில் இறுதிக்கெடு

 பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் அவமதிப்பு வழக்கில் இறுதிக்கெடு


ADDED : மார் 17, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி பிரபல பத்திரிகையாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர் தொடர்ந்துள்ள, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இறுதி விசாரணையை, செப்டம்பர் 24ம் தேதிக்கு, நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.

'மீ டூ' என்ற, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் அமைப்பு முன், 2018ல் பேசிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி என்பவர், எம்.ஜே.அக்பரிடம், தான் முன்னர் பணியாற்றிய போது, அவரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானேன் என்று கூறினார்.

அதையடுத்து எழுந்த விவாதங்களை அடுத்து, மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து, எம்.ஜே.அக்பர் விலகினார்.

தன்னை பாலியல் அத்துமீறல்காரன் என கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது, 2018 அக்டோபரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, டில்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன் நடந்து வந்தது.

நேற்று நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை, வரும் செப்டம்பர் 24ம் தேதி நடக்கும் என கூறி, வழக்கின் விசாரணையை, அந்த தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us