ADDED : ஜூலை 17, 2011 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை : ஜூலை 13ம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாபுலால் தாஸ் (42), இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் மும்பை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மும்பையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த 3 இடங்களிலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 க்கும் அதிகமாகும்.