சீக்கிரமே ஒரு முடிவு! கூட்டணியா, தனித்தா! ஜார்க்கண்ட் தேர்தலில் சஸ்பென்ஸ் வைக்கும் சிராக் பாஸ்வான்
சீக்கிரமே ஒரு முடிவு! கூட்டணியா, தனித்தா! ஜார்க்கண்ட் தேர்தலில் சஸ்பென்ஸ் வைக்கும் சிராக் பாஸ்வான்
UPDATED : செப் 23, 2024 10:21 PM
ADDED : செப் 23, 2024 03:34 PM

ராஞ்சி; ஜார்க்கண்ட் தேர்தலில் கூட்டணியா? தனித்தா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான நிலைமைகளை ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரிகள் ஜார்க்கண்ட் சென்றனர். அரசியல் கட்சிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களுக்கும் அவர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இறங்கி இருக்கின்றன. தேர்தல் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் ராஞ்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;
ஜார்க்கண்ட் தேர்தல் வருவதற்குள் கட்சியை பலப்படுத்துவது குறித்த செயல்களில் இறங்கி இருக்கிறோம். கட்சியின் கூட்டத்தில் தேர்தலில் கூட்டணியா, தனித்தா என்பது குறித்து முடிவு செய்யப்போகிறோம். கட்சியை வலுப்படுத்த பல இடங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
பாலமு, தன்பாத், ஜாம்ஷெட்பூர் என பல இடங்களில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதை தொடர்ந்து எந்த திசையில் நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.அவரது கட்சி, மத்தியில் பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.